சீர்திருத்தங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நேர்மையான, நியாயமான, மிகவும் வெளிப்படையான பணி நியமனங்களை, ஒவ்வொரு கட்டத்திலும், தொடர்ச்சியாக செய்து வருகிறது.

தேர்வுகள்:

தேர்வறைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, எல்லா தேர்வு மையங்களும் பறக்கும் படையால் கண்காணிக்கப்படுகின்றன

மாற்றுத்திறனாளிகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு, தேர்வு மையங்களில், அவர்களுக்கென ஒதுக்கப்படும் தேர்வறைகள் தரைத் தளத்தில் அமையுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்காக, தேவைப்பட்டால் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) அவர்களுக்கென ஒதுக்கப்படுவார்கள்.

அதிகமான பாதுகாப்பும், மந்தணப் பணிக்குரிய விதிமுறைகளை தேர்வு மையங்களும், தேர்வறைகளும் கண்காணிப்பு கருவியால் கண்காணிக்கப்படுகிறது. காணும் இக்காட்சிகள் நேரலையில் அலைவரிசை செய்யப்படுவதுடன், பதிவும் செய்யப்படுகிறது. தேர்வை கவனத்துடனும் மற்றம் பாதுகாப்புடனும் நடத்த வேண்டிய ஒருங்கிணைந்த பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விடைக் குறிப்புகள்:

தேர்வு முடிந்தவுடன், தேர்வுக்குரிய விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியடப்படும். கொள்குறி வினாக்கள் அமைப்பில் இடம்பெற்றுள்ள, இத்தேர்வு குறித்த ஆட்சேபங்கள் தேர்வர்களுக்கு இருப்பின், இணையவழி முகவரி வழியே வாரியத்திற்கு தெரியப்படுத்தலாம்.

ஆட்சேபத்திற்குரிய விடை சார்ந்த குறிப்புகள், பாட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் கூர்ந்தாய்வு செய்த பின் இறுதியான விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பணிநியமன ஆயத்தப் பணிக்கு முன்னர் வெளியிடப்படும்.

தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளை இவ்விடைக்குறிப்பின் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

வருடாந்திர திட்டமிடல்:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுகள் குறித்த ஒவ்வொரு வருடமும் வாரியத்திற்குரிய இணைத்தளத்தில் வெளியிடப்படும்.

இத்திட்டங்கள், தேர்வர்களுக்கு தேர்வுகளுக்கு முன்னர் செய்யும் ஆயத்தப்பணிகளை செவ்வனே திறம்பச் செய்ய மிகபும் உதவியாக இருக்கும்.

ஆசிரியர் தேர்வு வாரியம்,, 3வது மற்றும் 4வது தளம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கட்டிடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in

அனைத்து குறைதீர் விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட குறைதீர் மன்னஞ்சலில்மட்டுமே அனுப்பப்படவேண்டும். கடிதங்கள், அஞ்சல் வழி மற்றும் பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. : trbgrievances[at]tn[dot]gov[dot]in    பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 29.09.2024
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
page hits counter
phone-img whatsapp-img