தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

பள்ளிக் கல்வித் துறை (C2) அரசாணை எண். 15.11.2011 தேதியிட்ட அரசாணையின்படி, அரசாங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கொள்கைகளில் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக கீழ்கண்ட ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

அ) இடைநிலை ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, பணி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விடுப்பு மனு (SLP) ஆணை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆ) நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், எழுத்துத் தேர்வின் மூலமாக (ஆசிரியர் தகுதித் தேர்வு) தெரிவு செய்யப்படுகிறார்கள். மேற்கூறியவையனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதுடன், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் செவ்வனை நடைபெறுகிறது.
இ) ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தக்கூடிய ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு, ஆசிரியர் நியமனங்களைச் செய்து வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை (TRB) அரசாணை எண்.128, 23.08.2021 தேதியிட்ட ஆணைப்படி கீழ்க்கண்ட ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

1 அரசாங்கத்தால் அறிவிக்கப்படாதவரை நியமனத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலம், வாழ்நாள் வரை செல்லுபடியாகும் ஒன்றாகவே கருதப்படும்.
2 மேற்கூறிய ஆணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழுக்கும் பொருந்தும்.

பிரிவு 23, உட்பிரிவு (1) இன்படி குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009 (RTE ACT). மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி இயக்ககத்தின் ஆகத்து 23, சூலை 29 மற்றும் சூன் 28, 2018 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கைகளின்படி, முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை விதிமுறைகளாக வரையறுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை (C2), அரசாணை எண்.181, 15.11.2011 தேதியிட்ட ஆணைப்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வை (TNTET) நடத்தும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.

மேலும் பள்ளிக் கல்வித் துறை (TRB) அரசாணை எண் 149, 20.07.2018 தேதியிட்ட ஆணைப்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், எழுத்து தேர்வையும் எழுதினால் மட்டுமே பணி நியமனம் பெறுவார்கள் என்றும் அறிக்கையிடுகிறது.

 

 

 

ஆசிரியர் தகுதித் தேர்வு

 

 

தாள்

 

 

தேர்வு நாள்

 

தேர்வெழுதிய தேர்வர்களின் எண்ணிக்கை


தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை

 

தேர்ச்சி சதவீதம்

2012

 I

 

12.07.2012 F.N

305405

1735

0.56

2012

 II

12.07.2012 A.N

409121

713

0.17

துணை தேர்வு

I

14.10.2012 F.N

278725

10397

3.73

துணை தேர்வு

II

14.10.2012 A.N

364370

8864

2.43­­­

2013

I

17.08.2013

262187

30592

11.67

2013

II

18.08.2013

400311

42124

10.52

மாற்றுத் திறனாளி

II

21.05.2014

4693

945

20.14

2017

I

29.04.2017

241555

16197

6.71

2017

II

30.04.2017

5122260

18578

3.63

2019

I

08.06.2019

162316

551

0.33

2019

II

09.06.2019

379735

316

0.08

மொத்தம்

3320678

131012

 

 

  1. ஆசிரியர் தகுதித் தேர்வு – முதல் தாளில் தகுதி பெற்று தேர்வு செய்யப்படாதவர்களின் எண்ணிக்கை (2019 ஆம் ஆண்டின்படி) – 47213
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு – இரண்டாம் தாளில் தகுதி பெற்று தேர்வு செய்யப்படாதவர்களின் எண்ணிக்கை (2019 ஆம் ஆண்டின்படி) – 51363
  3. ஆசிரியர் தகுதித் தேர்வு சூலை 2022 மற்றும் ஆகத்து 2022 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடம், மூன்றாம் மற்றும் நான்காம் தளங்கள், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரி சாலை, சென்னை-600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in

அனைத்து குறைதீர் விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட குறைதீர் மன்னஞ்சலில்மட்டுமே அனுப்பப்படவேண்டும். கடிதங்கள், அஞ்சல் வழி மற்றும் பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. : trbgrievances[at]tn[dot]gov[dot]in
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
page hits counter
phone-img whatsapp-img