வருடாந்திர திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு பணி நியமனங்களை எழுத்துதேர்வு போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் பணிவாய்ப்புகளை தேர்வர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை தடுக்கவும், ஒரே காலகட்டத்தில் நடத்தப்படும் பல தேர்வுகளை எதிர் கொள்வதை தவிர்க்கவும் முதன்முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர பணி நியமன திட்டமிடலை வெளியிட்டு வருகிறது.
இதற்கான தற்காலிக கால அட்டவணையை, இவ்வாரியம் நடத்தும் அனைத்து எழுத்து தேர்வுகளுக்கும், 2022 ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது, இதன் மூலம் தேர்வர்கள், தாங்கள் எழுத வேண்டிய தேர்வுகளுக்கான தயாரிப்பு பணிகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவதற்கு ஏதுவாக அமையும்,
வருடாந்திர திட்டமிடல் 2020-2021
குறிப்புகள்
1. மேற்குறிப்பிட்டு கால அட்டவணை தற்காலிகமானது. இத்திட்டமிடல் தேர்வர்களுக்கான, தேர்வுக்குரிய முன் ஆயத்த தயாரிப்பு பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. மேற்குறிப்பிட்ட திட்டமிடலில், தேவையானவற்றைச் சேர்க்கவும், நீக்கவும், மாற்றம் செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழு உரிமையுண்டு மேலும் குறிப்பிட்ட தேர்வு நாட்களை முன்கூட்டியோ அல்லது ஒத்தி வைக்கவோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழு உரிமையுண்டு
3. மேற்குறிபிட்ட பணியிடங்கள் தற்காலிகமானது. மேலும் அறிவிப்பு வெளியிடும் நேரத்திலோ அல்லது இறுதி தெரிவு செய்தலுக்கு முன்னரும் இப்பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது.
4. பாடத்திட்டம் மற்றும் பாட அட்டவணை குறித்த அறிவிப்புகளை www.trb.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
5. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும், ஊடகங்களின் நடப்பு செய்திகளிலும் மற்றும் அறிவிப்புகள் மூலம் தேர்வுகள் குறித்த செய்திகளைப் பெறலாம்.