ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் இவ்வமைப்பு அரசாணை எண் 1320, கல்வி நாள் 17.08.1987 அன்று அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, சரியான பணியிடத்தில் நியமனம் செய்வதற்காகவும், காலதாமதத்தை களைந்து இச்செயல்பாட்டை விரைவுபடுத்துவதே இவ்வாரியத்தின் முக்கியப் பணியாகும். இப்பணியைச் செய்வதற்கான செயல்பாட்டு அமைப்பு மூன்று நிலைகளைக் கொண்டது.
1 | தலைவர் | தகுதி நிலையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் |
2 | உறுப்பினர்கள் | தகுதி நிலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர்கள் |
3 | உறுப்பினர் செயலர் | தகுதி நிலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர்கள் |
பள்ளிக் கல்விக்குரிய ஆசிரியர்களை தெரிவு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், தன் நம்பகத் தன்மையான செயல்பாட்டால், கல்லூரி கல்வித் துறைக்கான, தொழிற்கல்விக்கான மற்றும் சட்டக் கல்விக்கான ஆசிரியப் பணிகளை தெரிவு செய்யும் பணியையும் திறம்பட ஏற்று செயலாற்ற துவங்கியது. அரசாணை எண் 1357, கல்வி நாள் 26.09.1990 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் சீரமைக்கப்பட்டு, அதன்
அ) தலைவராக | இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (இ.ஆ.ப.) (முதுநிலை) , |
ஆ) உறுப்பினர்களாக | பள்ளிக்கல்வி இயக்குநர் நிலையில், |
இ) உறுப்பினர் செயலராக | தகுதி நிலையில் உள்ள கூடுதல் இயக்குநர்/ பள்ளிக் கல்வித்துறையின் இணைஇயக்குநர்/ கல்லூரிக் கல்வித்துறையின் இணைஇயக்குநர்/ தொழிற்கல்வித் துறையின் இணைஇயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். |
வாரியத்தின் முந்தைய செயல்பாடுகள், கணினி சார்ந்து இல்லாததால், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த வேண்டியதன் அவசிய தேவையையும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான புதிய விதிமுறைகளையும் மற்றும் செயல்முறைகளையும் ஏற்ற அரசாங்கம் அரசாணை எண் 1223, கல்வி நாள் 12, சூலைத்திங்கள், 1998 அன்று ஏற்று, திருத்தம் கொண்டு வந்தது.
01.07.2021 அன்று நடைபெற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான புதிய கட்டமைப்பும், நியமங்களும் மற்றும் செயல்பாடுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கான செயற்பாட்டு குழு ஆசிரியர்களின் தகுதிநிலையை முன்னேற்ற பல வழிமுறைகளை பரிந்துரை செய்ய வேண்டி அரசாணை எண் 135, பள்ளிக்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியத்துறை, 20.09.2021 அன்று வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைப்பு
அரசாணை (நிலை) எண். 1 பள்ளிக் கல்வி (ஆசிரியர் தேர்வு வாரியம்)த் துறை
வாரியக் குழு கூடுதல் உறுப்பினர்
அரசாணை எண் 97 பள்ளிக்கல்வித்துறை (ஆசிரியர் தேர்வு வாரியம்) நாள்.30.05.2023 ன்படி நிதித்துறை செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி
Copyrights © 2022 Teachers Recruitment Board. All rights reserved.