இளங்கலையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது செய்ய வேண்டியதும் மற்றும் செய்யகூடாததும்

 

வரிசை எண் செய்யக்கூடியது செய்யக்கூடாதது
1 இளங்கலையில் விண்ணப்ப மனுவை நிரப்பும்போது மிக கவனத்துடன் பூர்த்தி  செய்ய வேண்டும். மேலும் மனுவில் குறிப்பிட்ட கடவுசொல்லையும், அலைபேசி எண்ணையும், எதிர்காலத் தேவைக்காக குறித்து வைத்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கடவுச்சொல்லை எக்காரணம் கொண்டும் பிறரிடம் பகிரக் கூடாது. 
2 இளங்கலையில் விண்ணப்ப மனுவை ஒப்படைக்கும் போது அம் மனுக்கான பதிவெண் உருவாக்கப்படும். மனுக்குரிய எண்ணையும், பதிவெண்ணையும் எதிர்காலப்  பயன்பாட்டிற்காக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்ப மனு எண்ணையும், பதிவெண்ணையும் குறித்த விபரங்களை எவரிடமும் பகிரக்கூடாது. 
3 புகைப்பட படியெடுத்தலும், கையொப்ப படியெடுத்தலும கட்டாயம் செய்யப்பட வேண்டிய நடைமுறையாகும்.  தங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய மறவாதீர்கள்.
தங்களுடைய கையொப்பத்தையும்  பதிவேற்றம் செய்ய மறவாதீர்கள். 
தெளிவற்ற புகைப்படத்தையும் , மற்ற புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்யாதீர்கள். 
4 விண்ணப்பத்தாரர்கள்  தங்களுடைய பயன்பாட்டுக்குரிய அலைபேசி எண்ணையும் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் பிறருடைய அலைபேசி எண்ணையும் மற்றும் பிறருடைய மின்னஞ்சல் முகவரியையும், விண்ணப்பத்தில் குறிப்பிடக்கூடாது. 
ஏனெனில் தாங்கள் விண்ணப்பித்த பணியை குறித்த அல்லது மற்ற விபரங்கள், தங்களுடைய அலைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் செய்திகளாக அனுப்பப்படும். 
5 விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகளில் அல்லது அறிக்கையில் குறிப்பிட்ட அளவின்படி படியெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெறவேண்டும்.  குறிப்பிட்ட அளவின்படி  இல்லாத, அளவில் சிறிய அல்லது பெரிய புகைப்படங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு. 
6 தேர்வர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.  தேர்வர்கள் தங்களுக்கென ஒதுக்கப்படாத இடத்தில் தேர்வெழுதினால், தகுதியிழப்பு அடைவர். 
7 தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வறை நுழைவுச் சீட்டு மற்றும் புகைப்படப் பிரதி ஒன்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.  தேர்வு நடைபெறும் இடத்திற்கு தேர்வர்கள் தேர்வறை நுழைவுச் சீட்டு மற்றும் புகைப்படப் பிரதி இல்லாமல் வரக்கூடாது. 
8 தேர்வர்கள் அறிவுறுத்தல்களை கவனமாக படித்து பார்க்கவும்.  அறிவுறுத்தல்கள் கவனமாக படித்து பார்க்காது இருத்தல் / படிப்பதை தவிர்த்தல் கூடாது.  
9   மின்னனு அல்லது மின்னணு தொடர்பு சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

 

 

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம்,, 3வது மற்றும் 4வது தளம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கட்டிடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in

அனைத்து குறைதீர் விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட குறைதீர் மன்னஞ்சலில்மட்டுமே அனுப்பப்படவேண்டும். கடிதங்கள், அஞ்சல் வழி மற்றும் பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. : trbgrievances[at]tn[dot]gov[dot]in    பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 29.09.2024
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
page hits counter
phone-img whatsapp-img