தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு தேர்வுகளை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தி, ஆசிரியர்களை தெரிவு செய்து வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், வேளாண்மை கல்வி பயிற்றுனர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பின் தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மை நலத்துறையினர், சமூக பாதுகாப்புத் துறை சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் நகராட்சிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
மேலும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான இளநிலை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை பேராசிரியர்களுக்கான தேர்வுகளையும்,அரசு பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான பயிற்றுனர்கள் மற்றும் பேராசிரியர்களை பணியமர்த்துவதற்கான முக்கியப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் திறம்படச் செய்து வருகிறது.
மேற்கூறிய இப்பணிகளனைத்தையும் குழந்தைகளுக்கான இலவச கல்வி உரிமை மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 காட்டும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி செய்து வருகிறது. 2012ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதித் தேர்வையும், இவ்வாரியம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம்,,
3வது மற்றும் 4வது தளம்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கட்டிடம்,
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,
கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in
Copyrights © 2022 Teachers Recruitment Board. All rights reserved.