தொடர்பு எண்கள் : 1800 425 6753
குறைதீர்மையம் கீழ்க்கண்ட பிரிவுகளில் தேர்வர்களுடைய மனுக்களைப் பெற்றுவருகிறது.
1. விசாரணை – தொலைபேசிவாயிலாக
2. விசாரணை - நேரடிதொடர்பு
3. அஞ்சல்வழி – குறைதீர்மனுக்கள்பெறுதல்
4. மின்னஞ்சல் – குறைதீர்மனுக்கள்பெறுதல்
1. தொலைபேசி வாயிலாக விசாரணை:
தேர்வர்களுக்கு தேவையான பொதுவான செய்திகளை குறைதீர் மையம் அல்லது தகவல் மையத்திலேயே பெறலாம். சிக்கலான குறைகளுக்கான விளக்கத்தை, நேரடியாக அதற்குரிய பிரிவுகளுக்குரிய அலுவலர்களைச் சந்தித்து தகுந்த விளக்கங்களைப் பெறலாம். இதற்கான பதிவேடு ஒன்றை குறைதீர் மையமோ அல்லது தகவல் மையமோ பராமரிக்க வேண்டும்.
2. நேரடி விசாரணை:
(அ). வாய்மொழி விளக்கம் / தெளிவு பெறுதல்.
தேர்வர்களுக்கு தேவையான பொதுவான விளக்கங்களை குறைதீர்மையம் அல்லது தகவல் மையத்திலேயே பெறலாம். சிக்கலான குறைகளுக்கான விளக்கத்தை, நேரடியாக அதற்குரிய பிரிவுகளுக்குரிய அலுவலர்களைச் சந்தித்து, அதற்குரிய தீர்வினைப் பெறலாம்.
(ஆ). தேர்வர்களிடமிருந்து எவ்விதமான அச்சிடப்பட்ட நகல்கள் பெறப்படமாட்டது.
(இ). தேர்வர்கள் தங்களுடைய மனுக்களை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப இயலும். அதற்கான பதில்கள் பதிலஞ்சல் வாயிலாகவே அனுப்பப்படும்.
(ஈ). அவசர தேவைக் கருதி நேரடியாக தங்கள் மனுக்களை ஒப்படைக்க குறைதீர் மையம் அல்லது தகவல் மையங்களுக்கு வருகை புரிபவர்களின் அச்சிடல் நகல்கள் ஊடுகதிர் படியெடுக்கப்பட்டு இயங்கலையில் குறிப்பிட்ட பிரிவுக்கு, அனுப்பப்பட்டவுடன், அச்சிடல் நகல்கள், தேர்வர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். அவர்கள் அளித்த மனுக்களுக்குரிய பதில்கள் மின்னஞ்சலில், தேர்வர்களுக்கு 24 மணிநேரத்தில் அளிக்கப்படும்.
(உ). எழுதப்பட்ட மனுக்கள்:
தேர்வர்கள் தங்கள் குறைதீர் மனுக்களை கடிதம் வாயிலாக ஒப்படைக்கும்போது, அதற்குரிய பதிலை பெறுவதற்கு ஏதுவாக, தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், அதற்குரிய பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, தகுந்த பதில்கள் மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய மின்னஞ்சலில் அனுப்பப்படும். இப்பணிக்கென, தனியாக ஒரு பதிவேடு பராமரிக்கப்பட்டு, நிர்வாகப் பொறுப்பில் உள்ள துணை ஆட்சியர், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பார்வையிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால், இப்பதிவேடு, ஒவ்வொரு மாதமும், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
3. அஞ்சல் வழி – குறைதீர் மனுக்கள் பெறுதல்:
4.மின்னஞ்சல் வழி – குறைதீர் மனுக்கள் பெறுதல்:
5.தேர்வர்களால் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்:(FAQ)
குறைதீர் தகவல் மையம், தேர்வர்களால் அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குரிய. பதில்களை, தற்போதைய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் குறைதீர் மனுக்கள் பெறப்படுதல் குறைவதோடு, பணிநேரம் பயனுள்ளதாக ஏதுவாகும்.
6. அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குள் அடங்காத மனுக்கள் மட்டும் உடனடியாக தகுந்த பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, தாமதிக்காமல், அதற்குரிய பதில்கள் அனுப்பப்படும்.
7. இதற்கென பிரத்யேகமான அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு, தேர்வர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
8. அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அனைத்து குறைதீர் மனுக்களும், அதில் பதிவேற்றப்பட்டு, அதற்குரிய பதில்களும் தரப்பட்டு, குறைகள் களையப்படும்.
9. ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஆசிரியர் தேர்வு வாரியம்,
மூன்றாம் மற்றும் நான்காம் தளம். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடம்,
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் ,
கல்லூரி சாலை,
சென்னை – 600006.
தகவல் மையத்தின் செயல்பாடு:
2015 ஆம் ஆண்டு முதல், கணினிமயமாக்கப்பட்ட மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய தகவல் மையம் , புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடத்தில் தரைத்தளத்தில் செயல்பட்டு வருகிறது