1987 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய நோக்கம், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களை பணியமர்த்துவதாகும். இப்பணியோடு இவ்வாரியமானது பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாது, உயர்கல்வித்துறை மற்றும் சட்டக் கல்வியியல் துறைகளுக்குமான பேராசிரியர்களை நியமனம் செய்யும் பணியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் TNTET ஐ நடத்தும் தற்சார்பு அமைப்பாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு பிரிவுகளுக்கான பணியிட நியமனங்கள்:-
ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் நம்பகத்தன்மையுடைய அமைப்பு, கீழ்க் காணும் பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்கின்றது.
1 .பள்ளிக் கல்வி
இடைநிலை ஆசிரியர்கள்
உடற்கல்வி ஆசிரியர்கள்
ஓவிய ஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்கள்
தையல் ஆசிரியர்கள்
இசை ஆசிரியர்கள்
முதுநிலை ஆசிரியர்கள்
உடற்கல்வி இயக்குநர்கள் – நிலை -I
வட்டாரக் கல்வி அலுவலர்கள்
வேளாண் கல்வி பயிற்றுநர்கள்
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(SCERT) - பேராசிரியர்கள்
மாநிலகல்விஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(SCERT) - முதுநிலைபேராசிரியர்கள்
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(SCERT) - இளநிலை பேராசிரியர்கள்
2. உயர் கல்வி:
அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள்
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பேராசிரியர்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்லூரிக் கல்விக்கான உதவிப் பேராசிரியர்கள்
3. சட்டக்கல்வியியல் தகுதித் தேர்வு:
அரசு சட்டக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் – நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு:
ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் இவ்வமைப்பு, அரசாணை எண் 181, பள்ளிக் கல்வித்துறை 15.11.2011 அன்று தேதியிட்ட ஆணைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
Copyrights © 2022 Teachers Recruitment Board. All rights reserved.